உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழை சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்

வாழை சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மேற்குப் பகுதியில், விவசாயம் செய்வதற்கு, கூலி தொழிலாளர்கள் சரியாக வராததால், விவசாயிகளே வேலை செய்து கொள்ளும் வகையில், வாழை, சாம்பார் வெள்ளரி, மரவள்ளி போன்றவைகளை சாகுபடி செய்துள்ளனர்.இதில், கதலி வாழை கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் கூலி தொழிலாளர்களுக்கு அதிகமாக வேலை இல்லை. சிறிய வேலைகளை விவசாயிகளே செய்து கொள்கின்றனர். வாழை தார்களை கேரளா வியாபாரிகள், அவர்களுடைய செலவில் வாழையை வெட்டி கதலி வாழைப்பழங்களை கிலோ ஒன்றுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரை கொடுத்து எடுத்து கொள்கின்றனர். மரவள்ளியும், சாம்பார் வெள்ளரியும் கேரளா வியாபாரிகள் எடுத்து செல்வதால், கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இதற்காக விவசாயிகள் செலவு செய்ய வேண்டியதும் இல்லை. இந்த சாகுபடியினால், விவசாயிகளுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கிறது. இதனால், இப்பகுதியில் வாழை சாகுபடியை அதிகளவில் விவசாயிகள் மேற்கொள்ள துவங்கி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை