உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.30 லட்சத்தில் பிரசவ வார்டு கட்டட பணி

ரூ.30 லட்சத்தில் பிரசவ வார்டு கட்டட பணி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் பிரசவ வார்டில் 30 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:இங்கு இருக்கும் பிரசவ வார்டுக்கு மேல் புதிதாக கட்டடம் கட்டும் பணி தற்போது துவங்கியுள்ளது. எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் பிரசவத்துக்கு பின் பெண்களுக்கான கவனிப்பு வார்டு அமைக்கப்படுகிறது. 30 படுக்கை வசதிகள் அமையும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதில் சரிவு தளம் (ரேம்ப்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதை கட்டும் இடத்தில் இரண்டு வேப்ப மரங்கள் தடையாக உள்ள நிலையில் அவற்றை வெட்டுவதென தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய இன்னும் ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை