உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு நீர்மட்டம் உயர்வு

ஆழியாறு நீர்மட்டம் உயர்வு

பொள்ளாச்சி : ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர்மழையால் தினமும் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.தென்மேற்கு பருவமழை ஜூலை மாத துவக்கத்தில் இருந்து தீவிரமாக பெய்கிறது. இதனால் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மலையடிவாரத்தில் உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 159.39 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,558 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 666 கனஅடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது. ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 106.20 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 455 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 186 கனஅடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது. ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடி உயர்ந்து வருகிறது. திருமூர்த்தி அணையின் 60 அடி உயரத்தில் 33.53 அடி நீர்மட்டமும், அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 53.33 அடி நீர்மட்டமும் உள்ளது.நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) :சோலையாறு- 42, பரம்பிக்குளம்- 33, ஆழியாறு- 7, திருமூர்த்தி- 4, மேல்நீராறு- 76, கீழ்நீராறு- 43, வால்பாறை- 27, சர்க்கார்பதி- 12, தூணக்கடவு- 20, பெருவாரிப்பள்ளம்- 27, பொள்ளாச்சி- 10, மணக்கடவு- 13, மேல்ஆழியாறு- 2, காடம்பாறை- 2, நல்லாறு- 4, நவமலை- 3.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை