உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 'டயஸ்' விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து 'எஜூசாட்' முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் புள்ளி விபரங்களை சேகரிக்கும் வகையில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி குறித்த அனைத்து விபரங்களும் பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தெற்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.இதில், கல்வியியல் செயற்கை கோள் மூலம் 'கியான் தர்ஷன்-2' மூலம் தேசிய அளவில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வி மாவட்டத்தை சேர்ந்த 61 துவக்கப்பள்ளி, 22 நடுநிலைப்பள்ளிகள், நான்கு உயர்நிலைப்பள்ளி, ஒன்பது மேல்நிலைப்பள்ளிகள், 35 மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் என 131 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பயிற்சியில், 'பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை ஆசிரியர்களை பிழையின்றி கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம், அனைத்து பள்ளிகள் குறித்த புள்ளி விபரங்களையும் சேகரிக்க முடியும்' என்றனர். பயிற்சி முகாமில், தெற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெள்ளிங்கிரி, உதவி துவக்க கல்வி அலுவலர் மாரியப்பன், ஆசிரிய பயிற்றுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை