உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு பயிற்சி மையம் துவக்கம்

சிறப்பு பயிற்சி மையம் துவக்கம்

கோவை : அரசு அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் தொடக்க விழா, கோவை காவலர் பயிற்சிப்பள்ளியில் நேற்று நடந்தது. மையத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கருணாகரன் பேசியதாவது: தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரம் பல்வேறு துறை அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சியானது, மாநில அளவில் பவானிசாகர் பயிற்சி மையத்தில் அளிக்கப்படுகிறது. பயிற்சி அளிக்க வேண்டிய அலுவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவையில் இந்த மையம் தொடங்கப்படுகிறது. இம்மையத்தில் 231 இளநிலை உதவியாளர் (மகளிர்) பயிற்சி பெறவுள்ளனர். அணிக்கு தலா 35 பேர் வீதம், 45 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ