உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கணும் கொந்தளிக்கின்றனர் கோவை மக்கள்

பாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கணும் கொந்தளிக்கின்றனர் கோவை மக்கள்

ச மீபத்தில், காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு, கோவை மக்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.'

பதிலடி கொடுக்கணும்

'கொடூரமான படுகொலை இது. ஈவு இரக்கம் இல்லாமல், அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளனர். காஷ்மீர் பயங்கரவாதிகள் சில ஆண்டுகளாக அடங்கி இருந்தனர். இப்போது வெளியே வந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.-ஞானவேல் கிராஸ்கட்ரோடு'

பதறிப்போனேன்

'இந்த செய்தியை பார்த்தவுடன், மனம் பதறி போனேன். மனித நேயம் தான் மானுட தத்துவம். இதை மறந்து, மிருகத்தனமாக பயங்கரவாதிகள், சுற்றுலா சென்ற அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். பயங்கரவாதிகள் மீது, இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.- ஜாஸ்மின் கோவை

'வேரோடு அழிக்கணும்

'இந்தியாவில் பயங்கரவாதத்தை மோடி அரசு, வேரோடு அழிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை, இந்தியா தடை செய்து இருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். நாம் இங்கு மத நல்லிணக்கம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அங்கே நீ இந்துவா என்று கேட்டு, சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்திய அரசு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இன்னும் கடுமையாக்க வேண்டும்.- கவுரி சமூக ஆர்வலர்

'மோடி விடக்கூடாது

'மனைவி கண் எதிரில் அவரது கணவரை சுட்டுக்கொன்று, வெறியாட்டம் போட்டுள்ளனர் பயங்கரவாதிகள். பலியான 26 பேரும் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள். இவர்களை கொன்ற பயங்கரவாதிகள் கோழைகள். பிரதமர் மோடி அவர்களை விடக்கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகனாம்பாள் சமூக ஆர்வலர்'

இரும்புக்கரம் தேவை

'காஷ்மீர் எப்போதும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலில் இருக்கும் பகுதி. நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கலாம். இனி இப்படி இருக்கக் கூடாது. சுற்றுலா தலங்களில் இந்தியா பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.- ஜார்ஜ் கோவை

'பதிலடி கொடுக்கணும்

'பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவுடன் மோத முடியாமல், பயங்கரவாதிகளை ஏவிவிட்டுள்ளது. இது கோழைத்தனமான செயல். மதத்தின் பெயரை கேட்டு, இந்து என தெரிந்தவுடன் சுட்டு கொன்றுள்ளனர். இந்தியா, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.-கலையரசன் காந்திபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஏப் 26, 2025 12:24

அதென்ன கோவை திருப்பூர் மக்களிடம் மட்டுமே எப்போதும் கருத்து கேட்பது? மற்ற ஊர்க்காரர்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?


Ramesh Sargam
ஏப் 26, 2025 11:57

பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளை வேரோடு அழிக்கவேண்டும். அவர்கள் நாட்டில் உள்ளவர்களையும் அவர்கள் நாட்டிற்கு சென்று வேரோடு அழிக்கவேண்டும். நம் நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் வழியாக செல்லும் நதி நீர் உடனே நிறுத்தப்படவேண்டும். அவர்கள் தண்ணீர் இல்லாமல் சாகவேண்டும்.


சமீபத்திய செய்தி