உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான கராத்தே; தங்கம் வென்ற கோவை மாணவி

மாநில அளவிலான கராத்தே; தங்கம் வென்ற கோவை மாணவி

கோவை; சென்னையில் நடந்த மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை மாணவி தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.சென்னை மயிலாப்பூரில், 42வது தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. ஜூனியர், சீனியர் மற்றும், 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடந்த இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஜூனியர்(53 கிலோ) குமித்தே பிரிவில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் மாணவி மதுஸ்ரீ முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.தங்க பதக்கம் வென்ற மாணவியை, கல்லுாரி நிர்வாகிகள் பாராட்டினர். டில்லியில் நடந்த கே.ஐ.ஓ., பெடரேசன் கோப்பை பிரீமியர் லீக் மற்றும் யூத் லீக் போட்டியில்(கட்டா) வெள்ளியும், கோவை மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும், இம்மாணவி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை