உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் சிங்கஸ்துாபி புனரமைப்பு பணி துவக்கம்

கோவையின் சிங்கஸ்துாபி புனரமைப்பு பணி துவக்கம்

கோவை: கலெக்டர் அலுவலக பழைய நுழைவாயில் முன் நிறுவப்பட்டுள்ள சிங்கஸ்துாபியை புனரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்.கோவை கலெக்டர் அலுவலகம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இரண்டும் இணையும் சாலை திருப்பத்தில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா சாலையின் முகப்பில், உயரமான சிங்கஸ்துாபி உள்ளது. இது ஐம்பதாண்டுகளை கடந்த பழமையான ஸ்துாபி.இதை பராமரித்து புதுப்பிக்கும் பணியை பொதுப்பணித்துறை நேற்று முன்தினம் துவங்கியது. ஸ்துாபியை சுற்றி, 40 அடி உயரத்துக்கு சவுக்கு மரப்பூட்டுக்களால் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பணியாளர்கள் ஏறி ஸ்துாபிக்கக்கான மராமத்து மற்றும் புனரமைப்புப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இப்பணிகள் 20 நாட்களில் நிறைவடையும். அதன் பின் புத்தம் புதியதாக ஜொலிக்கும் என்று பணியாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை