உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதுவம்பள்ளி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

பதுவம்பள்ளி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

கருமத்தம்பட்டி; சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சியில் கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். தார் ரோடும் பணியில், மெட்டல் கலவை முறையாக போடப்பட்டுள்ளதா என, ரோட்டை தோண்ட செய்து, ஆய்வு செய்தார். ராயர் பாளையத்தில் தனியார் நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு நிதியில் தூர் வாரப்பட்ட ரங்கசமுத்திரம் குளத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர், குழந்தைகளுக்கு செய்யப்பட்ட சாதம் மற்றும் கொண்டைக்கடலை குழம்பை சாப்பிட்டார். கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நெகிழி கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட நிழற்குடையை ஆய்வு செய்தார். முன்னதாக, வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எல்.ஆர்.டி., நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தானியங்கி வெளிப்புற இதயம் மீட்பு கருவியின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி