கராத்தே கற்றுத்தர கலெக்டர் அழைப்பு
கோவை; கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு, கராத்தே தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கராத்தே அடிப்படை பயிற்சியினை 3 மாதங்களுக்கு ஒரு வாரத்துக்கு 3 பயிற்சிகள் வீதம் 36 பயிற்சிகள் அளிக்க வேண்டும். அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவம் பெற்ற நிறுவனங்கள், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் ஆக. 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.