உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்கள் நிறுவனத்துக்கு விசிட்

கல்லுாரி மாணவர்கள் நிறுவனத்துக்கு விசிட்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியின், இன்ஸ்டிடியூட் ஆப் இன்னவேஷன் கவுன்சில் மற்றும் மார்கெட்டிங் கிளப் சார்பில், பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கல்லுாரி மாணவர்கள், ஆனைமலை அருகேயுள்ள சுந்தரபுரியில் 'ஆதிசூர்யா புட்ஸ்' நிறுவனத்தை பார்வையிட்டனர்.அங்கு, புதுமையான பல்வேறு இயந்திரங்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் சிறுதானிய மாவு வகைகள் தயாரிப்பு, பதப்படுத்துதல், சிறுதானிய சிற்றுண்டிகள் உற்பத்தி, செயல்முறைகள், தரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைபடுத்துதல் குறித்து, நிறுவனத்தாரிடம் கேட்டறிந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள், பாலாஜிவிக்னேஷ், கவிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி