உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதனை குழுவினருக்கு பாராட்டு; வரும் 6ல் முதல்வர் பங்கேற்பு

சாதனை குழுவினருக்கு பாராட்டு; வரும் 6ல் முதல்வர் பங்கேற்பு

கோவை; வள்ளிக்கும்மி அரங்கேற்றத்தில் சாதித்த குழுவினருக்கு, கோவையில் நடக்கும் விழாவில், தமிழக முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், மாநில துணை பொது செயலாளர் நித்யானந்தம், நிருபர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு பிப்., 4ம் தேதி, பெருந்துறையில் நடந்த விழாவில், ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளிக்கும்மி நிகழ்ச்சி, சாதனை நிகழ்வில் இடம் பிடித்தது.இதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், சாதனை நிகழ்த்திய பெண்களுக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்குநாடு கலைக்குழு சார்பில், பாராட்டு விழா நடத்தப்படுகிறது.வரும் ஏப்., 6ம் தேதி, கோவை கொடிசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழுவினரை பாராட்டுகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். முதல்வர் முன்னிலையில், 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும், வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கொங்குநாடு கலைக்குழு தலைவர் பாலு, இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி, துணை செயலாளர்கள் பிரேம், பவானி ராஜ் உட்பட, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட இளைஞரணி, மாவட்ட, மாணவரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை