உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வில் அதிக  மதிப்பெண்: மாணவியருக்கு கமிஷனர் அறிவுரை

பொதுத்தேர்வில் அதிக  மதிப்பெண்: மாணவியருக்கு கமிஷனர் அறிவுரை

கோவை:மாநகராட்சி, 72வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சம்பந்தம் ரோட்டில் உள்ள, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.பள்ளி மாணவர்களிடம் பாடத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த அவர், மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர்கள் பயிற்றுவிப்பு முறையை பார்வையிட்டார். வரும் பொதுத்தேர்வில், 100 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டுமென, அறிவுரை வழங்கினார். மேலும், பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை