பிளஸ் 2வுக்கு பின் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் என் முகவரி வழிகாட்டி நிகழ்ச்சியில் கமிஷனர் பேச்சு
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மாணவர்களுக்கான 'என் முகவரி' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி, பெரியகுளம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கல்வி உளவியல் ஆலோசகர் சரண்யா, மற்றும் பாரதியார் பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழில் வழிகாட்டி துறைத் தலைவர் விமலா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.நிகழ்வில் பேசிய மாநகராட்சி கமிஷனர், “பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்கள் சரியான வழிகாட்டுதல்களை பெறுவது மிக முக்கியம். இல்லையெனில், அவர்களின் நான்கு ஆண்டுகள் வீணாகக்கூடும். இது என் தனிப்பட்ட அனுபவம்,'' என்றார்.கலெக்டர் கூறுகையில், “சென்னைக்கு அடுத்ததாக, கோவையில்தான் அதிக கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கவும், சந்தேகங்களை தீர்க்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் முக்கியம்,'' என்றார்.கல்வி உளவியல் ஆலோசகர் சரண்யா, பிளஸ் 2க்கு பின் மாணவர்கள் எதிர்நோக்கும் உளவியல் குழப்பங்கள், தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களில் மனநிலையைஎவ்வாறு சமாளிப்பதுஎன்பது குறித்து விளக்கினார்.இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.