குடிநீர் வினியோகம் இல்லையென புகார்
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே, தொண்டாமுத்துாரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அம்பராம்பாளையத்தில் இருந்து, ஆழியாறு ஆற்று நீர் வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர், தொண்டாமுத்துார் பகுதிக்கு முறையாக வருவது இல்லை என புகார் எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:தொண்டாமுத்துார் பகுதியில் சீரற்ற குடிநீர் வினியோக பிரச்னை நிலவுகிறது. கரட்டுப்பாளையம் வரை முறையாக வரும் குடிநீர், தொண்டாமுத்துக்கு வருவதில்லை.தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதால், சிரமமாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்வருவதில்லை.மேலும், குடிநீர் வழங்கப்படும் நேரமும் முறையாக இல்லை. இதனால், வேலைக்கு செல்வோர் குடிநீர் பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கள ஆய்வு செய்து பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.