உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேங்கி கிடக்கும் குப்பை கழிவு முழுமையாக அகற்றும் பணி

 தேங்கி கிடக்கும் குப்பை கழிவு முழுமையாக அகற்றும் பணி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகள், கட்டடக் கழிவுகளை முழுமையாக அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நாளுக்கு நாள் வணிக கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி சேகரமாகும் குப்பையை அளவு அதிகரிக்கிறது. அவ்வகையில், நிரந்தர, ஒப்பந்தம் என, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, குப்பை தினமும் சேகரம் செய்யப்பட்டு, அகற்றப்பட்டும் வருகின்றன. இதுதவிர, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாய் துார்வாருதல், புதர்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பை உள்ளிட்ட கழிவு, கட்டடக் கழிவு முழுமையாக அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது: நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மூட்டை, மூட்டையாக குப்பை குவிந்து கிடக்கின்றன. இதை அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு குப்பைகள் முழுமையாக அகற்றம் செய்யப்படுகிறது. அவை, லாரிகள் வாயிலாக நல்லுார் உரக்கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மீண்டும் அந்த இடங்களில் மக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்க, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்