உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதல்  கண்டக்டர் பலி; 30 பயணியர் காயம்

டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதல்  கண்டக்டர் பலி; 30 பயணியர் காயம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே விபத்துக்குள்ளாகி நின்ற எல்.பி., காஸ் டேங்கர் லாரி மீது, அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் கண்டக்டர் இறந்தார். கோவை மாவட்டம், உக்கடத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அரசு பஸ், 30 பயணியருடன், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை திண்டுக்கல், வேடசந்துாரை சேர்ந்த டிரைவர் காசிராஜன், 54, ஓட்டினார். பொள்ளாச்சி நோக்கி வந்த பஸ், ஆச்சிப்பட்டி அருகே, விபத்துக்குள்ளாகி ரோட்டோரத்தில் நின்ற எல்.பி. காஸ் டேங்கர் லாரியின் பின்புறம் மோதி, மைய தடுப்பு சுவரில் மோதி நின்றது. தகவலறிந்த தாலுகா போலீசார் சென்று, பஸ்சில் காயமடைந்தவர்களை மீட்டனர். பஸ்சின் இடதுபக்க இருக்கையில் அமர்ந்திருந்த, திண்டுக்கல் மாவட்டம், நந்தக்கோட்டை குஜிலம்பாறையை சேர்ந்த கண்டக்டர் பாலசுப்ரமணி, 44, சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ்சில் இருந்த பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரையை சேர்ந்த, 30 பயணியர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். கண்டக்டர் உடல் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டேங்கர் லாரி லோடுடன் இருந்தாலும் எவ்வித காஸ் கசிவும், அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
செப் 19, 2025 05:24

சாலை ஓரம் நிறுத்தும் வாகனங்கள் இதற்கு விடிவே இல்லையா. கடுமையான அபராதம் விதிக்கபட வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை