உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறனாய்வு தேர்வில் வெற்றி மாணவியருக்கு பாராட்டு

திறனாய்வு தேர்வில் வெற்றி மாணவியருக்கு பாராட்டு

கருமத்தம்பட்டி, ; தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில், வாகராயம்பாளையம், ஊஞ்சப்பாளையம் அரசு பள்ளி மாணவியர் இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, மத்திய அரசு தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை அம்மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. நடப்பாண்டு தேர்வில், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ ஊஞ்சப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சஞ்சனா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு, பொன்னாடை அணிவித்து, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை