உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு, தமிழகத்திற்கு கல்வி மற்றும் நுாறு நாள் வேலை திட்டம் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.அரசியலமைப்பு கொடுத்துள்ள அனைத்து மக்களுக்குமான உரிமைகள் இதில் மீறப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், காளீஸ்வரன், நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார், இஸ்மாயில் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ