மேலும் செய்திகள்
பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி
09-Sep-2025
பொள்ளாச்சி: இந்திய தர நிர்ணய அமைவனம் வாயிலாக, தென்னைநார் துகள் (காயர் பித்) தரத்தை வரையறுத்தல் குறித்து ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்றது. நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்கத்தின் கீழ், இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில், 'மானக் மந்தன்' புதிய இந்திய தரநிலை குறித்து தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையில் நடந்தது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) இயக்குனர் ரமேஷ் வரவேற்றார். தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி, 'காயர் பித்' மற்றும் அதன் சார்பு பொருட்கள் ஏற்றுமதியாளர் அசோசியேசன் தலைவர் மகேஷ்குமார், 'காயர் பித்' உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். 'காயர் பித்' உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கைகள், சந்தேகங்களை கேட்டறிந்தனர். கோவை பி.ஐ.எஸ். இயக்குனர் ரமேஷ் கூறுகையில், ''இந்திய தர நிர்ணய அமைவனம் வாயிலாக, 'காயர் பித்' கட்டி, இந்திய தரநிலை IS19103: 2025ன் தரத்தை வரையறுத்தல், நிலைத்தன்மையை உறுதி செய்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த தர நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தர நிலையை செயல்படுத்த முடியுமா, குறைபாடுகள் உள்ளதா என கருத்துக்கள் பகிரப்பட்டன,'' என்றார். பி.ஐ.எஸ். இயக்குனர் ரினோ ஜான் கூறியதாவது: மத்திய அரசு, அனைத்து பொருட்களின் தர நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் என, 24,000 பொருட்கள் தர நிலை உள்ளது. தற்போது, 'காயர் பித்' தரநிலை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தர நிலையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், விதிமுறைகள் மாற்றம் செய்ய வேண்டுமா என, காயர் பித் உற்பத்தியாளர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படுகிறது. இந்த கருத்துக்களை, டில்லியில் உள்ள கமிட்டிக்கு பரிந்துரை செய்து மாற்றங்கள் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். காயர் பித் உற்பத்தியாளர்கள் கூறிய கருத்துகள் கேட்டறிந்து அவற்றை மேம்படுத்தப்படும். காயர் பித்துக்கு மூன்று விதமான, 'கிரேடு'கள் உள்ளன. 0.5க்குள், முதல் கிரேடு (குறைவான எலக்ட்ரிக் கன்டக்டிவிட்டி) மின் கடக்கும் திறன், 0.5 - 0.8 மீடியம் இ.சி. - இரண்டாவது கிரேடு; 0.8 அதிக மின் கடக்கும் திறன் கொண்டது மூன்றாவது கிரேடு என பிரிக்கப்பட்டது. இதில், காயர் பித் உற்பத்தியாளர்கள், 0.8 இ.சி., என்பதற்கு பதிலாக, 1.2 இ.சி., என நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காயர் பித் ஏற்றுமதி செய்வதற்கேற்ப தர நிலை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது: பிரதமர் மோடி, 'உள்நாட்டு பொருட்களுக்கு குரல் கொடுப்போம்,' என வலியுறுத்தியுள்ளார். அதன்படி, தென்னை நார் தொழில் மேம்பட்டால் கிராம பொருளாதாரம் மேம்படும். உள்நாடு, வெளிநாடு வணிகத்தை மேம்படுத்த, மத்திய அரசின் கீழ் இயங்கும் தர நிர்ணய சபை தென்னை நார் பொருட்களுக்கு தர நிர்ணயம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தர நிர்ணயம் செய்வதால், நம்முடைய பொருட்கள் தரம் மேம்பட உதவியாக இருக்கும். தரம் குறித்து பிரச்னை இருக்காது. சில இடங்களில் இருக்கும் அறிவியல் பகுத்தாய்வை, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். நம்முடைய தரச்சான்றும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காயர் பித்துக்கு, அந்த நாட்டு தரச்சான்றுடன் ஒத்து போக வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு, கூறினார்.
09-Sep-2025