உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா கல்லுாரியில் ஒருங்கிணைப்பு மையம்

ராமகிருஷ்ணா கல்லுாரியில் ஒருங்கிணைப்பு மையம்

கோவை;ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், உள் தர மதிப்பீட்டு மையம் சார்பில், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு மைய துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். 'ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா' நிறுவன இயக்குனர் கவிதாசன் மையத்தை துவக்கி வைத்து, அதற்கான சின்னத்தை வெளியிட்டார். தொழில்துறை மற்றும் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு மைய சின்னம் மற்றும் வாசகம் உருவாக்கிய மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உள் தர மதிப்பீட்டு மைய ஒருங்கிணைப்பாளர்கள் பர்வீன் பானு, கிருஷ்ணபிரியா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !