உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலை ஏற்றத்துக்காக கொப்பரை இருப்பு

விலை ஏற்றத்துக்காக கொப்பரை இருப்பு

நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 5,782 மூட்டைகள் (50 கிலோ வீதம்) கொப்பரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ நாம்' வாயிலாக விளைபொருட்களை விற்பனை செய்வதை விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.தற்போது விற்பனை கூடத்தில், 50 கிலோ வீதம் எடையுள்ள, 5,782 மூட்டைகள் கொப்பரையை, 39 விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.தற்போது, முதல் தர கொப்பரை, 148 முதல் 150 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர கொப்பரை 120 முதல் 130 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகிறது.விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் கூறுகையில், ''விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்வதை தவிர்த்து, இரும்பு வைக்க துவங்கியுள்ளனர். இனி கோடை காலம் துவங்க இருப்பதால், கொப்பரை விலை உயரும், என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை