உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், வேர்வாடல் நோய் காரணமாக, விளைச்சல் பாதித்துள்ளது. வழக்கமாக, மார்ச் மாதம் துவங்கி ஆக., மாதம் வரை நீடிக்கும் தேங்காய் சீசனில், 40 சதவீதம் மட்டுமே தேங்காய் வரத்து இருந்தது. இதனால், தேங்காய், கொப்பரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தேங்காய் சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், 'இ-நாம்' முறையில் விற்பனை செய்கின்றனர். கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையான, 4 மாதங்களில் 203 மெட்ரிக் டன் அளவு கொப்பரை, 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் என, 150 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஒரு கிலோ முதல் தர கொப்பரை 220 முதல் 235 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை 100 முதல் 180 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை