உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊழல் கண்காணிப்பு வாரம்; விழிப்புணர்வு நடைபயணம்

ஊழல் கண்காணிப்பு வாரம்; விழிப்புணர்வு நடைபயணம்

கோவை: ஊழல் மற்றும் கண்காணிப்பு வாரம் கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடைபயணம், கோவையில் நேற்று நடந்தது.கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இணைந்து, விழிப்புணர்வு நடைபயணத்தை நேற்று நடத்தியது.கோவை ரேஸ்கோர்ஸில் துவங்கிய நடைபயணத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முதன்மை மண்டல மேலாளர் சந்தீப், கொடியசைத்து துவக்கி வைத்தார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணன், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கண்காணிப்பு அதிகாரி மதுசூதனன், முதன்மை மண்டல அதிகாரி சுரேஷ், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கண்காணிப்பு அதிகாரி அருள் முருகன் உட்பட 120க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்றனர்.ஊழலின் தீமைகளை விளக்கும் பதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்கள் ஏந்தி சென்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி