மேலும் செய்திகள்
ராமபிரான் கோவிலில் நாளை ஆண்டு விழா
2 minutes ago
பள்ளியில் உணவுத்திருவிழா
5 minutes ago
அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
7 minutes ago
விளையாட்டு மைதானத்தில் கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு
10 minutes ago
வால்பாறை: வால்பாறை நகராட்சி மன்ற அவசரக்கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு, கமிஷனர் குமரன், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், தி.மு.க. கவுன்சிலர்கள் செல்வக்குமார், இந்துமதி, பால்சாமி, கீதாலட்சுமி, மாரியம்மாள் ஆகியோர், எஸ்டேட் பகுதியில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், என்றனர். கமிஷனர்: எஸ்டேட் ரோடுகள் அனைத்தும் சீரமைக்கும் வகையில், தோட்ட அதிபர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி, ரோடுகள் முறைப்படி நகராட்சி வசம் ஒப்படைத்த பின், மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று ரோடுகள் சீரமைக்கப்படும். காமாட்சி, மகுடீஸ்வரன் (தி.மு.க), வீரமணி (வி.சி.,), மணிகண்டன் (அ.தி.மு.க.,) ஆகியோர் பேசுகையில், 'வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை இடித்து புதிய வணிக வளாகம் கட்டும் பணியை ரத்து செய்ய வேண்டும்,' என்றனர். கமிஷனர்: தமிழக அரசின் பொது நிதியின் கீழ் மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் கட்டும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக வணிக வளாகம் கட்டும் பணி ஒத்திவைக்கப்படுகிறது. தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது: வாட்டர்பால்ஸ், காடம்பாறை பகுதியில் ரோடு மற்றும் தெருவிளக்குகளை உடனடியாக அமைக்க வேண்டும். ரொட்டிக்கடையில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட வேண்டும். சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லோனியில் யானையால் சேதப்படுத்தப்பட்ட பள்ளி சத்துணவு மையத்தை சீரமைக்க வேண்டும். வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்தப்பகுதியில் கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும். அக்காமலை ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து, குறுகலான ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் மற்றும் வயதானவர் மன்றக்கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, மன்ற அரங்கில் 'லிப்ட்' அமைக்க வேண்டும். முடீஸ் பஜார் பகுதியில் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதோடு, அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். ைஹபாரஸ்ட், வாகமலை, பன்னிமேடு, சின்கோனா (உபாசி), ேஷக்கல்முடி ரோடுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு, பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மார்க்கெட் பகுதி இடிப்பு குறித்த தீர்மானம் தவிர, மீதமுள்ள, 144 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியை இடித்து, அந்த இடத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகவளாகம் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் டெண்டரும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்ட வியாபாரிகள், 'மார்க்கெட் பகுதியை இடிப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே புதுமார்க்கெட் பகுதியில் புதிய வணிகவளாகம் கட்டும் பணியை ரத்து செய்ய வேண்டும்,' என்றனர். இந்நிலையில், மன்ற கூட்டத்தில் வணிக வளாகம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
2 minutes ago
5 minutes ago
7 minutes ago
10 minutes ago