உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஏழாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பு

 ஏழாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பு

அன்னூர்: கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, 'இ -பைலிங்' கில் உள்ள குறைபாடுகள் வக்கீல்களை வெகுவாக பாதிக்கிறது. இதனால் இ - பைலிங் முறையை சரி செய்யும் வரை, அனைத்து வழக்குகளுக்குமான கட்டாய இ -பைலிங் முறையை அமல்படுத்தியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, அதுவரை அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அன்னூர் கோர்ட்டில் ஏழாவது நாளாக நேற்றும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப் பில் ஈடுபட்டனர். வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. அன்னூர் வக்கீல்கள், கோவையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை