உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்

பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்

பொள்ளாச்சி; ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வரத்து அதிகரித்ததுடன், விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வெளிமாநிலங்கள்; பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு ரகங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.வியாபாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம், 3,500 மாடுகள் வரத்து இருந்தது; வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.நாட்டு காளை, 65 - 70 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு, 45 - 50 ஆயிரம், நாட்டு எருமை,50 - 55 ஆயிரம் ரூபாய்; முரா, 60 - 65 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,500 மாடுகள் வரத்து உயர்ந்து இருந்தது. ரம்ஜான் பண்டிகையையொட்டி வரத்து அதிகரித்து இருந்ததுடன், வியாபாரமும் விறுவிறுப்பாக இருந்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ