பட்டாசு கடை உரிமையாளர்கள் தவிப்பு
அன்னுார்; தீபாவளிக்கு இன்னும் 41 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடை நடத்த விண்ணப்பிக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு 60 அல்லது 75 நாட்களுக்கு முன்னரே மாவட்ட நிர்வாகம் தற்காலிக பட்டாசு கடை வைப்போர் இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 41 நாட்கள் மட்டுமே உள்ளது. இதுவரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் குறுகிய அவகாசத்தில் அரசின் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுவது சிரமமாக இருக்கும். சிவகாசியில் மொத்த விற்பனைக்கு பட்டாசு ஆர்டர் தருவதும் நிலையில்லாமல் உள்ளது. எனவே விரைவில் தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்,' என்றனர்.