உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களிடம் படைப்புத்திறன் வளர்ந்துள்ளது

மாணவர்களிடம் படைப்புத்திறன் வளர்ந்துள்ளது

கோவை; கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின், 30ம் ஆண்டு துவக்க விழா, வடகோவை மாருதி சங்கீத கான சபாவில் நேற்று நடந்தது. வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, ஓவியம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. வசந்தவாசல் கவிமன்ற செயலாளர் பிரசாத் பேசியதாவது: கோவையை மையமாக கொண்டு செயல்படும் எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுவதோடு, மாணவர்கள் மத்தியில் கலை இலக்கிய போட்டிகளை நடத்தி, கலை ஆர்வத்தை ஏற்படுத்தும் பணியை இந்த மன்றம் செய்து வருகிறது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கையை பார்க்கும் போது, மாணவர்களிடம் படைப்பு திறன் வளர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். எழுத்தாளர் முகில் தினகரன், கவிஞர்கள் சுந்தரராமன், சிவஞானம், தன்மானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி