மேலும் செய்திகள்
விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்
14-Dec-2024
நாய் பிடிக்கும் ஊழியர் மயங்கி விழுந்து பலி
25-Nov-2024
அன்னுார் : அன்னுார் அருகே, கிரிக்கெட் விளையாடியவர் மயங்கி விழுந்து இறந்தார்.பள்ளேபாளையம் அருகே மொக்கையூரை சேர்ந்த ரங்கராஜ் மகன் உதயகுமார், 28; கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று மதியம் அக்கரை செங்கப்பள்ளி அருகே சுமைதாங்கி மைதானத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது தாகம் எடுத்ததால், தண்ணீர் குடிப்பதற்காக மைதான எல்லையை நோக்கி நடந்து சென்றவர் திடீரென மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Dec-2024
25-Nov-2024