உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது காந்திபுரம்: கிராஸ்கட் ரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருபவர் கோபால்,28. இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அறந்தாங்கியை சேர்ந்த அலாவுதீன்,28, காந்திபுரத்தில் வழிமறித்தார். கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டிலிருந்த, ரூ. 820 ஐ பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். கோபால் கூச்சலிட்டதும் அப்பகுதியில் நின்றவர்கள் அலாவுதீனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர், போலீசார் கைது செய்தனர். ………. புகையிலை பொருள் விற்றவர்கள் கைது ரேஸ்கோர்ஸ்: போலீசார், பி.என்,பாளையம்,பழையூரிலுள்ள பெட்டி கடையில் சோதனையிட்டனர். அப்போது, தடை செய்த புகையிலை பொருள் விற்றதாக, ரேவதி,50, கைது செய்யப்பட்டார். சிங்காநல்லுார், புது காலனியில் புகையிலை பொருட்களை விற்ற ரவி,55, என்பவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை