மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஷா வாலிபர்கள் கைது
24-Oct-2026
ஒரே நாளில் 6 பேர் மாயம் காந்திபுரம்: மாநகருக்கு உட்பட பல்வேறு ஸ்டேஷன்களில் ஒரே நாளில், 7 பேர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரத்தில் விடுதியில் தங்கி பணியாற்றிய 21 வயது பெண் மாயமானார். சீரநாயக்கன்பளையத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற 91 வயது பெண் திரும்பவில்லை. காந்திபுரத்தில் தங்கி ஜவுளிகடையில் பணியாற்றிய 34 வயது பெண் மாயமனதாக கணவர் புகார் அளித்துள்ளார். கவுண்டம்பாளையத்தில் கல்லுாரிக்கு சென்ற 22 வயது மாணவி, துடியலுாரை சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவி ஆகியோர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு சென்ற கணவர் திரும்பி வரவில்லை என்று சரவணம்பட்டி போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார். ……………… கஞ்சா விற்றவர் கைது சாய்பாபா காலனி: ஜீவா நகரில் ரோந்து சென்ற போலீசார், இருட்டில் நின்று கஞ்சா விற்ற பீகார் நிதிஷ்குமாரை,20, கைது செய்தனர். சுக்ரவார் பேட்டை டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், சொந்த ஊரில் இருந்து கஞ்சா வரவழைத்து விற்றது தெரிந்தது. அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ………….. மது குடித்த 13 பேர் மீது வழக்கு காட்டூர்: பொது இடங்களில் மது குடிப்பவர்கள் பிடிக்க போலீசார் ரோந்து சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு பகுதிகளில் பொது இடத்தில் மது குடித்த 13 பேர் சிக்கினர். அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். ……………நகை திருட்டில் மேலும் ஒருவர் கைது ஆர்.எஸ்.புரம்: ஸ்மித்தேஸ் என்பவர் எஸ்.எம்.ஜூவல்லரி கிராப்ட் என்ற தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். அதில், 1,346 கிராம் தங்கம் திருடியதாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி மருபில்லா காஷி,22, மீது புகார் அளித்தார். கடையிலிருந்த மொத்த தங்கத்தை சரி பார்த்த போது, 658 கிராம் மட்டும் திருட்டுபோனது தெரிய வந்தது. மற்றொரு தொழிலாளி உடந்தையாக இருந்தது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். ……………
24-Oct-2026