உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

கணபதி: பாலன்நகரை சேர்ந்த கஸ்துாரி, 63 தனது பேத்தியுடன் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர், முன்பக்க கதவு வழியாக நுழைந்து, மூதாட்டியின் தலையனை அடியில் இருந்த சாவியை எடுத்துள்ளார். பின்னர், பீரோவில் இருந்த 12 கிராம் தங்கம், ஒரு மொபைல் போனை திருடிச்சென்றார். மூதாட்டி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இருசக்கர வாகனம் திருட்டு கணபதி: கணபதியை சேர்ந்த நாராயணசாமி, 62 இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, வாகனம் காணாமல் போயிருந்தது. சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை