உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளி பொருட்கள் திருட்டு

வெள்ளி பொருட்கள் திருட்டு

ஆர்.எஸ்.புரம்: வெங்கடாச்சலம் காலனியில் வசிப்பவர் சூரிய நாராயணன். இரவு, 11:30க்கு துாங்கச் சென்றார். காலையில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி குத்துவிளக்குகள், வெள்ளி பொருட்கள், ரூ.40 ஆயிரம் காணாமல் போயிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலை பொருட்கள் விற்பனை சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டி பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், 23 ஆயிரம் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் கிடைத்தன. பேக்கரியை நடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ராம்நாத், சிவவடிவேல், அஜய் கைது செய்யப்பட்டனர். * சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த வீரண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை