உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

சூலூர் அருகே இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டு தொழிலாளி பலியானார். தேனி மாவட்டம் வடகரையை சேர்ந்த ஆசிக் உலாம், 19. இவர், சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் மாலை, வேலை செய்து கொண்டிருந்தபோது, பர்னஸ் இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, நீலம்பரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

தடாகம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தடாகம் போலீசார் ஆனைகட்டி செக்போஸ்ட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நபர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜ்கோபி, 24, சௌமிக், 28, ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, 70 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை