உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

கொலை வழக்கில் இளைஞர் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் இருந்து அறிவொளி நகர் செல்லும் வழியில் தனியார் பவுண்டரி அருகில் உள்ள காலி இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், 25, மற்றும் அவரது தம்பி செந்தூர்பாண்டி, 22, பார்த்திபன், 23, ரஞ்சித், 22, ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கு வந்த சாமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நாகப்பன், 23, அங்கிருந்த ஹரிஹரனை பார்த்து, ஏன் ஏமாற்றுகிறாய் என கெட்ட வார்த்தை பேசி, தன்னிடம் இருந்த அரிவாளால், ஹரிஹரன் வாய்க்கு கீழே தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் இறந்தார். மேலும், அவரது தம்பி செந்தூர் பாண்டியன் முதுகிலும், ரஞ்சித் தலையிலும் வெட்டினார். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய நாகப்பனை கைது செய்தனர்.

6 பேர் சிறையில் அடைப்பு

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்தவர் ரத்தினசாமி, 47. விசைத்தறி உரிமையாளர். கடந்த, 25ம் தேதி மாலை, தறி சாமான்கள் வாங்க, கருமத்தம்பட்டி வந்து விட்டு, வடுக பாளையம் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, தொழிற்பேட்டை அருகே இரு பைக்குகளில் வந்த ஆறு பேர், கத்தியை காட்டி, ரத்தினசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்து, 1000 ரூபாய் பணம், செல்போன் மற்றும் நகையை பறித்தனர். மேலும், பெண்ணுடன் போனில் ஆபாசமாக பேசவைத்து, அதை வீடியோ எடுத்துள்ளனர். போலீசில் புகார் தெரிவித்தால், சமூக வலைத்தளத்தில் வீடியோவை பரப்பி விடுவோம், என, மிரட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ரத்தினசாமி, கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தெக்கலூரை சேர்ந்த சந்தோஷ்,25, ஹரிஹரன்,21, சரவணன், 24, மோகன்ராஜ், 41, ராகுல், 20, விஜய், 32 ஆகியோரை கைது செய்து பொருட்களை மீட்டு, சிறையில் அடைத்தனர். இதில் மோகன் ராஜ் மீது, கருமத்தம்பட்டி, அவிநாசி, சேவூர் ஆகிய ஸ்டேஷன்களில், ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனம் திருட்டு

மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பத்மநாபன், டெய்லர். இவர் நேற்று முன்தினம் தாசம்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றார். அப்போது அந்த வாகனத்தை நான்கு இளைஞர்கள் நோட்டமிட்டு, பின் லாவகமாக அதனை திருடி சென்றனர். இதுதொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ----

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ரங்கநாதன், 78. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனிடையே, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ரங்கநாதன், சாமி தரிசனம் செய்துவிட்டு, பவானி ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த லைப் கார்ட்ஸ் போலீசார், முதியவரை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, ரங்கநாதனை போலீசார் ஒப்படைத்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ