மேலும் செய்திகள்
கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
08-Aug-2025
பெரியநாயக்கன்பாளையம் அருகே ஹரிகரன்,25, என்ற நபரை கொலை செய்த குற்றத்துக்காக நாகப்பன், 23, என்ற நபரை போலீசார் கைது செய்தனர். நாகப்பன், சட்டம் ஒழுங்கு, பொது அமைதிக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குண்டர் தடுப்பு சட்டத்தின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கோவை கலெக்டர் பவன்குமார், கொலை குற்றம் சாட்டப்பட்ட நாகப்பன்,23, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கார் மோதி இருவர் பலி
அன்னூர் அருகே குன்னத்துரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராம்குமார், 22. கட்டிட தொழிலாளி. இவரும் பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, தற்போது குன்னத்தூரில் வசித்து வருபவர் ராமன் அரவிந்த் மகன் மோகன் குமார், 22. இருவரும் மோட்டார் பைக்கில் நேற்று முன்தினம் கோவில் பாளையத்திலிருந்து அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் மிக வேகமாக வந்த கார், மோட்டார் பைக் மீது மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பைக்கை ஓட்டிச் சென்ற ராம்குமார் அதே இடத்தில் இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த மோகன் குமார் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்தார். கோவில்பாளையம் போலீசார் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், தொட்டிபாளையத்தை சேர்ந்த சஞ்சித் ராஜா, 28, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தையை தாக்கிய மகன் கைது
அன்னூர் அருகே மங்காபாளையம், நஞ்சை தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, 75. மனைவி கமலமணி, 72. இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இதை ஒட்டி இவரது மகன் செந்தில்குமார், 40, கோழிப் பண்ணை வைத்துள்ளார். விவசாயமும் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் தண்ணீர் திறப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் செந்தில்குமார் கட்டையால் சரமாரியாக தந்தை பழனிச்சாமியின் தலை மற்றும் கால்களில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ரத்த காயம் அடைந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாய் கமல மணி கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
08-Aug-2025