உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாட்சியை மிரட்டிய குற்றவாளிகள் கைது

சாட்சியை மிரட்டிய குற்றவாளிகள் கைது

போத்தனூர்; கோவை, பி.கே.புதூர், மதுரை வீரன் கோவில், மலர் கார்டனை சேர்ந்தவர் சைமன், 19. 2023ல் சபரினாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சமாதானபுரத்தை சேர்ந்த வினித், 24, தூத்துக்குடி, சாத்தான் குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர், 29 கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் தங்களுக்கு எதிராக, சாட்சி கூறக்கூடாது என சைமனுக்கு மிரட்டல் விடுத்தனர். சைமன் புகாரின்படி குனியமுத்தூர் போலீசார் வினித், கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து, சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை