மேலும் செய்திகள்
ஆயுதப்படை போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
23-May-2025
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியில் இன்று காலை பயிற்சி நிறைவு விழா நடக்கிறது.நாடு முழுவதிலும் இருந்து சி.ஆர்.பி.எப்., பணிக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள சி.ஆர்.பி.எப்., மையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோவையில் கதிர் நாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்ட,153 வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா இன்று காலை சி.ஆர்.பி.எப்., பயிற்சி வளாகத்தில் நடக்கிறது. விழாவில், ஐ.ஜி., லாங்சின்குப் பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.மேலும், பயிற்சியின் போது சிறந்த முறையில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்ட வீரர்களுக்கு கோப்பை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
23-May-2025