உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  40வது ஐ.எம். நார்ம் செஸ் போட்டி 7 புள்ளியுடன் கியூபா வீரர் முதலிடம்

 40வது ஐ.எம். நார்ம் செஸ் போட்டி 7 புள்ளியுடன் கியூபா வீரர் முதலிடம்

காந்திபுரம்: காந்திபுரம் அலங்கார் ஹோட்டலில், 40வது தமிழ்நாடு ஐ.எம்., நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் செஸ் போட்டி கடந்த, 16 முதல், 22ம் தேதி வரை நடந்தது. இதில் வெளிநாட்டை சேர்ந்த ஐந்து பேர், இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் என, 10 பேர் பங்கேற்றனர். ஒன்பது சுற்றுகளின் நிறைவில், கியூபா வீரர் டயாஸ்மனி ஓடெரோ அகோஸ்டா, 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். பெரு வீரர் கார்லோமக்னோ ஒப்லிடாஸ் மற்றும் இந்திய வீரர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலா ஆறு புள்ளிகள் பெற்றனர். இந்திய வீரர் நிதின் பாபு, கியூபா வீரர் ஜோர்ஜ் மார்கோஸ் ஆகியோர் தலா, 5.5 புள்ளிகள், அர்ஜென்டினா வீரர் ரவுல் கிளவுரி, இந்திய வீரர் சித்தாந்த் பூனஜ் ஆகியோர் தலா, 4.5 புள்ளிகள், கொலம்பியா வீரர் சமன் பாலென்சியா, 2.5 புள்ளிகள், இந்திய வீரர் ஜெய் சங்கர், 1.5 புள்ளியும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு மாநில செஸ் சங்க தலைவர் மாணிக்கம் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி