மேலும் செய்திகள்
வாழையில் சிகாடோகா இலைப்புள்ளி நோய்
13-Jan-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10 முத்தூரில் பல வகை வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாயிகள் பரவலாக பல வகை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில், நெ.10 முத்தூர் பகுதியில் விவசாயிகள் பல வகை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.விவசாயி முருகானந்தம் கூறியதாவது:இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளேன். இதில், சாம்பிராணி வகை வாழை - 1,000, மொந்தன் வாழை - - 500 மற்றும் ரஸ்தாளி --- 300 என, மொத்தம் 1,800 வாழைக்கன்று நடவு செய்து பராமரித்து வருகிறேன்.நாற்று, சொட்டுநீர் பாசனம் அமைத்தல், உரம், களையெடுதல் போன்றவைகளுக்கு என, தற்போது வரை, 4 லட்சம் ருபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. வாரம் இரு முறை, மூன்று வகை வாழைத்தாரும் சேர்த்து, 50 முதல் 55 தார்கள் அறுவடை செய்யப்படுகிறது.இந்த வாழைத்தார்கள், கிணத்துக்கிடவு தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது மார்க்கெட்டில், சாம்பிராணி வகை வாழைத்தார் ஒன்றுக்கு, 600 ரூபாய்; மொந்தன் --- 300 மற்றும் ரஸ்தாளி --- 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இவ்வாறு, கூறினார்.
13-Jan-2025