மேலும் செய்திகள்
தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி
02-Jun-2025
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில் நீண்ட கால பயிர்களாக, தென்னை விவசாயம் விளங்கி வருகிறது. தென்னை மட்டும் சாகுபடி செய்துள்ள தோட்டங்களில், காலியிடங்களில் களைச்செடிகள் அதிகமாக முளைக்கும். அந்த களைகளை எடுக்க தனியாக செலவு செய்ய வேண்டும்.இதை கருத்தில் கொண்டு, தற்போது தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்தப் பட்டம், வெண்டைக்கு ஏற்றது என்பதால், தென்னையில் ஊடுபயிராக வெண்டை சாகுபடி செய்து வருகின்றனர்.இதன் மூலம் களைகள் முளைப்பது தவிர்க்கப்படும். வெண்டை சாகுபடி செய்து, 45 நாட்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டரில், 90 முதல் 100 நாட்களில், 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும். தற்போது, வெண்டைக்கு, 50 முதல் 70 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் பலரும், தென்னையில் ஊடுபயிராக வெண்டை சாகுபடி செய்து வருகின்றனர்.
02-Jun-2025