உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்

கோவை: சர்வதேச சைபர் பாதுகாப்பு மாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர போலீசார் சார்பில், ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் திவ்யா, நடை பயணத்தை துவக்கி வைத்தார். நடை பயணத்தில் பங்கேற்றவர்கள், சைபர் சுகாதாரம், பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் குற்றங்களை தடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ஏந்தி சென்றனர். கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன், சைபர் க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜா, எஸ். ஐ.க்கள் சுகன்யா, பிரியங்கா, தாமரைக்கண்ணன், கல்லுாரி இந்திய கணினி சங்க மாணவர் கிளை தலைவர் பெருமாள், ஒருங்கிணைப்பாளர் ஹரிஹர கோபாலன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை