மேலும் செய்திகள்
விமான நிலையத்தில் சிறுத்தை நடமாட்டம்
27-Oct-2024
தொண்டாமுத்தூர்,; அட்டுகல்லில், ஆடு, நாய், பூனை போன்றவற்றை கொன்று வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கோவை வனச்சரகத்திற்குட்பட்ட ஓணாப்பாளையம், ஆனைமடுவு, கெம்பனூர், அட்டுக்கல் ஆகிய பகுதிகளிலும், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட குப்பேபாளையம், புள்ளாகவுண்டன்புதூர், வளையங்குட்டை ஆகிய பகுதிகளிலும், கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தோட்டங்களில் உள்ள வீடுகளில் வளர்த்து வரும் இளம் கன்று குட்டி, ஆடு, நாய்கள், பூனைகளை கடித்து கொன்று வருகிறது. நேற்றுமுன்தினம், அதிகாலை, 2:00 மணிக்கு, அட்டுக்கல்லில் உள்ள சுரேஷ் என்பவரின் தோட்டத்தில் வளர்த்து வந்த ஒரு நாய் மற்றும் 3 பூனைகளையும், சிறுத்தை கடித்து கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ் என்பவரின் தோட்டத்தில், சுற்றித்திரிந்த ஒரு நாயையும் சிறுத்தை கடித்து கொன்று, புதருக்குள் சென்றது. கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்தின் எல்லைப்பகுதியான அட்டுக்கல் பெரும்பள்ளத்தில் உள்ள புதரில் சிறுத்தை மறைந்திருந்து, வேட்டையாடி வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தை உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இந்நிலையில், அட்டுக்கல்லில் வனத்துறையினர் கேமரா பொருத்தி, சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில், கூண்டு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
27-Oct-2024