ரோட்டில் பூசணிக்காய் உடைப்பதால் பாதிப்பு
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு முக்கிய ரோடு பகுதிகளில், திருஷ்டி கழிக்க ரோட்டில் பூசணிக்காய் உடைப்பதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைந்தனர். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பிராதன ரோடுகளில், வணிக நிறுவனத்தினர் திருஷ்டி கழித்து பூசணிக்காய் உடைப்பது அடிக்கடி நடப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதில், புது பஸ் ஸ்டாண்ட் முன்பாக ரோட்டின் மையப்பகுதியிலும், பள்ளி அருகிலும், சினிமா தியேட்டர் செல்லும் ரோட்டின் முன்பும் பலரும் பூசணிக்காய் உடைக்கின்றனர். மக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய ரோட்டில் பூசணிக்காய் உடைக்கப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் பலர் தடுமாறி செல்கின்றனர். மேலும், ரோட்டில் பூசணிக்காய் சிதறிய இடத்தில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, ரோட்டின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்துகின்றனர். இதையும் மீறி ரோட்டில் பூசணிக்காய் உடைத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.