உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாலுகா கட்டடத்தில் புதர் செடிகளால் பாதிப்பு

தாலுகா கட்டடத்தில் புதர் செடிகளால் பாதிப்பு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாலுகா அலுவலக கட்டடத்தின் பின்பக்கம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இந்த கட்டடத்தின் பின்பக்கம் வளர்ந்துள்ள மரத்தின் கிளை மற்றும் செடிகள் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளன. கட்டடத்தின் மின் ஒயர்கள், இணையதள கேபிள் மற்றும் இதர கேபிள்களில் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. கட்டடத்தின் மேல் பகுதியில் மரக்கிளைகள் அதிகமாக உள்ளது.மேலும், கட்டடத்தின் ஜன்னல் பகுதி சேதமடைய துவங்கியுள்ளது. இந்த கொடிகள் கட்டடத்தின் மேல் பகுதி மற்றும் ஜன்னல் பகுதி வரை வளர்ந்துள்ளது.பாதுகாப்பு கருதி, கட்டடத்தின் பின் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை