மேலும் செய்திகள்
ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
15-Oct-2024
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சார்-பதிவாளர் அலுவலகம் அருகே, சர்வீஸ் ரோடு சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், சார்-பதிவாளர் அலுவலகம் அருகே, ஆகஸ்ட் மாதம் குறிச்சி, குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவு ஏற்பட்டது. அதிக அளவு குடிநீர் ரோட்டில் வழிந்தோடியது. இதனால், ரோட்டின் நடுவே பிளவு ஏற்பட்டு ரோடு சேதமடைந்தது.சர்வீஸ் ரோடு தற்போது வரை சீரமைப்பு செய்யாததால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு, தினமும், 100க்கும் மேற்பட்ட மக்கள் பத்திர பதிவு செய்ய வருகின்றனர். அவர்களின் வாகனங்களை சர்வீஸ் ரோட்டின் ஒரு பகுதியில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், ரோடு சேதமடைந்த பகுதியில் வாகனங்களை ஓட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதில், பைக் ஓட்டுநர்கள் அதிகளவு தடுமாறி செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் ரோட்டில் ஏற்பட்டுள்ள சேதம் பெரிதாவதுடன், விபத்து நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சர்வீஸ் ரோட்டில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
15-Oct-2024