மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, தாளக்கரை டி.நல்லிகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் பயிலும், 5 முதல் 14 வயது குழந்தைகளின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக, குறைந்த கட்டணத்தில் நடனத்துக்கான தனிப் பயிற்சி வகுப்பை, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் துவக்கி வைத்தார். பயிற்சியில் சேர்ந்த, 20 மாணவர்களின் ஒரு மாத கட்டணமான, 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார். இப்பயிற்சியானது வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறும். நடன ஆசிரியர் நர்கீஸ், பயிற்சி பெறும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
05-Sep-2025