உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளின் கல்வி உதவிக்கு டிச. 31க்குள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகளின் கல்வி உதவிக்கு டிச. 31க்குள் விண்ணப்பிக்கலாம்

- நமது நிருபர் -தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான உதவிகளை பெற டிச., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று, தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தொழிலாளர் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு, அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில், 2024ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை, 2025ம் ஆண்டு ஜன., 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதியை செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியம் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.ப்ரி கே.ஜி., முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர் குழந்தைகளுக்கு, 1,000 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.புத்தகம் வாங்க உதவித்தொகை வழங்கப்படும்; 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கும், தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வி உதவி தொகை பெற, தொழிலாளரின் மொத்த ஊதியம் (டி.ஏ., உட்பட) 35 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் கூறுகையில், ''கல்வி தொடர்பான உதவிகளை பெற, வரும் டிச., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அல்லது www.lwb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை - 6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றார்.அரசின் இந்த திட்டத்தில் தொழிலாளர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி