செயல்திறன் மிக்க பம்ப்களை தயாாிக்கும் டெக்கான் நிறுவனம்
வி வசாயத்துக்கு மட்டுமின்றி தொழில்துறையினரும் விரும்பும் பம்ப், டெக்கான் பம்ப். மின் சிக்கன தொழில்நுட்பத்தில் முன்னணி வகித்து வருகிறது. கோவை கணபதியில் உள்ள டெக்கான் பம்ப் நிறுவனம், 50 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையை பெற்றுள்ளது. வீட்டு உபயோகம் முதல் பெரும் தொழிற்சாலைகள், நீரேற்று நிலையங்கள் வரை சிறப்பாக செயல்படும் பம்புக்களை, 0.5 எச்.பி.,முதல் 500 எச்.பி., திறன் வரை தயாரித்து வருகிறது. இதில், கிணற்றுக்கான சப்மெர்ஷிபிள் பம்ப் புகழ் பெற்றுள்ளது. இது குறித்து, டெக்கான் சப்மெர்ஷிபிள் பம்ப், கார்வெல் பம்ப் நிறுவனத்தின் தலைவர் கார்த்திக் கூறியதாவது: ஆழமான கிணறாக இருந்தாலும், ஆழ்துளை கிணறாக இருந்தாலும் அவற்றின் ஆழத்திற்கு ஏற்ப செயல் திறன்மிக்க பம்ப் செட்டுகளை டெக்கான் மற்றும் கார்வெல் பிராண்ட் பம்ப் தயார் செய்து வருகிறது. விவசாயத்திற்கும், விவசாயம் சார்ந்த பயன்பாட்டிற்கும் அதிகம் விரும்பும் பம்ப் செட்டாக டெக்கான் திகழ்ந்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட்டுகளும் தயாரித்து வருகிறோம்.மின்சாரத்தின் பயன்பாட்டினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய இந்த தருணத்தில், சூரிய ஒளி மின்மோட்டார்கள் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நாட்டின் எரிபொருள் தேவையையும் மிச்சப்படுத்துகிறது.டெக்கான், கார்வெல் பம்ப்புகள் தேசிய அளவில் பல விருதுகளையும் வென்றுள்ளது. அரை எச்,பி., முதல் 500 எச்.பி.,வரை தயார் செய்ய முடியும். நம்பிக்கை, நீண்ட ஆயுள், கொண்ட எங்களது நிறுவன தயாரிப்புகள், சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பெயர் பெற்றவை. இந்த பம்புகள் விவசாயிகளின் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.